/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உணவு பாதுகாப்பு துறை சோதனை: பேக்கரி அடைப்பு
/
உணவு பாதுகாப்பு துறை சோதனை: பேக்கரி அடைப்பு
ADDED : செப் 25, 2025 02:03 AM
குமாரபாளையம் :குமாரபாளையம்-சேலம் சாலையில், ஜே.கே.கே., பங்களா எதிரே பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் கேக், இதர உணவு பொருட்கள் சுகாதாரமாக இல்லாமல், காலாவதியான, கெட்டுப்போன பொருட்கள் விற்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து, குமாரபாளையம் உணவு பாதுகாப்பு அலுவலர் லோகநாதன், பள்ளிப்பாளையம் உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன் ஆகியோர், இந்த கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இங்கு வைக்கப்பட்டுள்ள உணவு பொருட்களை ஆய்வு செய்து, கெட்டுப்போன உணவுப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் தங்க விக்னேஷ் உத்தரவுப்படி, இந்த கடை அடைக்கப்பட்டது. விசாரணை முடியும் வரை கடையை திறக்கக்கூடாது என எச்சரித்து சென்றனர். சில மாதங்களுக்கு முன், இதே கடையில் சுகாதாரமற்ற முறையில் உணவுப்பொருட்கள் விற்கப்படுவதாக கண்டறிந்து, கடைக்கு சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.