/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராசிபுரத்தில் 3வது நாளாக மழை வீதியில் தேங்கிய தண்ணீரால் அவதி
/
ராசிபுரத்தில் 3வது நாளாக மழை வீதியில் தேங்கிய தண்ணீரால் அவதி
ராசிபுரத்தில் 3வது நாளாக மழை வீதியில் தேங்கிய தண்ணீரால் அவதி
ராசிபுரத்தில் 3வது நாளாக மழை வீதியில் தேங்கிய தண்ணீரால் அவதி
ADDED : நவ 03, 2024 02:27 AM
ராசிபுரம்: ராசிபுரத்தில், கடந்த, 31 மற்றும் 1 ஆகிய, 2 நாட்கள் தொடர்ந்து மழை பெய்தது. இதனால், பழைய பஸ் ஸ்டாண்ட் அரசு மருத்துவமனை, புதிய பஸ் ஸ்டாண்ட், புதுப்பாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
இதனால் பொதுமக்கள், நோயாளிகள் அவதிப்பட்டனர். சில மணி நேரங்-களில் மழைநீர் வடிந்து இயல்பு நிலைக்கு திரும்பியது.மூன்றாவது நாளாக, நேற்றும் மதியம், 2:30 மணி முதல், 3:30 மணி வரை, ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. ராசிபுரம் நகர் பகுதிகளான சின்னகடைவீதி, பெரியகடை வீதி சிவானந்தா சாலை, பழைய பஸ் ஸ்டாண்ட், புதிய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக ராசிபுரம் அரசு மருத்துவமனை வளாகத்-துக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. கடந்த, இரண்டு நாட்கள் மழையால், வடிகால் பகுதியில் சுத்தம் செய்திருந்தனர். இதனால் சிறிது நேரத்தில் தண்ணீர் வடிந்தது. அதேபோல், கோனேரிப்-பட்டி பகுதியில் முறையான சாக்கடை வசதி இல்லாத இடங்-களில் வீதிகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவ-திப்பட்டனர். நகராட்சி துப்புரவு பணியாளர்கள் விரைந்து வந்து தண்ணீரை சுத்தம் செய்தனர்.
கோனேரிப்பட்டி காந்திநகர், வடமாரியம்மன் கோவில் பகு-தியில் சாக்கடை வசதி இல்லாததால் குறைவாக மழை பெய்-தாலும் கழிவு நீருடன் சேர்ந்துமழைநீர் சாலைகளில் குட்-டைபோல் தேங்கி விடுகிறது. பல இடங்களில் சாக்கடை இருந்-தாலும் குப்பைகள் அடைத்துக்கொண்டு மழைநீருடன் வழிந்து செல்கிறது. இதனால் இப்பகுதியில் எப்போதும் மழை பெய்-தாலும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.