/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கூண்டு வைத்து குரங்குகளை பிடித்த வனத்துறையினர்
/
கூண்டு வைத்து குரங்குகளை பிடித்த வனத்துறையினர்
ADDED : டிச 06, 2024 07:35 AM
சேந்தமங்கலம்: வாழவந்திக்கோம்பை குடியிருப்புகளில், சுற்றி வந்த குரங்குகள் பிடிபட்ட நிலையில் மீதமுள்ளவைகளையும் பிடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
சேந்தமங்கலம் அருகே கொல்லிமலை அடிவாரம் வாழவந்திக்கோம்பை பஞ்., வெண்டாங்கியில் மொபைல்போன் டவர் உள்ளது. இதை சுற்றிலும் ஏராளமான குரங்குகள் சுற்றி வருவதுடன், அருகில் உள்ள குடியிருப்புகளில் சென்று, அங்குள்ள பொருட்களை நாசம் செய்து வந்தது. இதையடுத்து, அந்த பகுதி மக்கள் அளித்த புகார்படி, அங்கு சென்ற வனத்துறையினர் அப்பகுதியில் சுற்றித்திரிந்த, 15 குரங்குகளை கூண்டு வைத்து பிடித்தனர். இதை பார்த்து பல குரங்குகள் அங்கிருந்து தப்பி ஓடின. தப்பி ஓடிய குரங்குகளையும் பிடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.