/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'மாஜி' முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் சைக்கிள் போட்டி: 350 மாணவர் பங்கேற்பு

ADDED : ஜன 05, 2025 01:50 AM
நாமக்கல்,: தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சைக்கிள் போட்டி, நாமக்கல்லில் நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் கலாநிதி முன்னிலை வகித்தார். எம்.பி., ராஜேஸ்குமார் போட்டியை துவக்கி வைத்தார். 13, 15, 17 வயது என, மூன்று பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. அதில், 13 வயதிற்குட்பட்ட மாணவருக்கு, 15 கி.மீ., துாரம், மாணவியருக்கு, 10 கி.மீ., துாரம், 15 வயதிற்குட்பட்ட மாணவருக்கு, 20 கி.மீ., துாரம், மாணவியருக்கு, 15 கி.மீ., துாரம், 17 வயதிற்குட்பட்ட மாணவருக்கு, 20 கி.மீ., துாரம், மாணவியருக்கு, 15 கி.மீ., துாரம் என, தனித்தனியாக போட்டி நடத்தப்பட்டது.
அதில், மாவட்டம் முழுவதும் இருந்து, 350க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு, முறையே, 5,000, 3,000, 2,000 ரூபாய் பரிசும், நான்கு முதல், 10 இடங்களுக்கு, 250 ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும்.
நாமக்கல் மாநகராட்சி துணை மேயர் பூபதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா, அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.