/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
3ல் முன்னாள் முதல்வர் பிறந்த நாள் 102 முன்னோடிகளுக்கு பொற்கிழி
/
3ல் முன்னாள் முதல்வர் பிறந்த நாள் 102 முன்னோடிகளுக்கு பொற்கிழி
3ல் முன்னாள் முதல்வர் பிறந்த நாள் 102 முன்னோடிகளுக்கு பொற்கிழி
3ல் முன்னாள் முதல்வர் பிறந்த நாள் 102 முன்னோடிகளுக்கு பொற்கிழி
ADDED : ஜூன் 01, 2025 01:12 AM
நாமக்கல், 'முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 102வது பிறந்த நாளான, வரும், 3ல், 102 மூத்த முன்னோடிகளுக்கு, பொற்கிழி வழங்குவது' என, மாவட்ட செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, தொகுதி பொறுப்பாளர்கள் ரேகா பிரியதர்ஷினி, முனவர் ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் பேசினார்.
கூட்டத்தில், வரும், 3ல், முன்னாள் முதல்வரும், கட்சியின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின், 102-வது பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், 102 கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்க முடிவு செய்யப்பட்டது.
மேலும், கருணாநிதியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில், நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றிய, நகர, டவுன் பஞ்., பகுதிகளில், கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தி, நலதிட்ட உதவிகள் வழங்க வேண்டும். பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்குதல், மரக்கன்று நடுதல், ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்குதல் உள்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.