/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முன்னாள் எம்.பி., இறுதி சடங்கு அமைச்சர், எம்.பி., அஞ்சலி
/
முன்னாள் எம்.பி., இறுதி சடங்கு அமைச்சர், எம்.பி., அஞ்சலி
முன்னாள் எம்.பி., இறுதி சடங்கு அமைச்சர், எம்.பி., அஞ்சலி
முன்னாள் எம்.பி., இறுதி சடங்கு அமைச்சர், எம்.பி., அஞ்சலி
ADDED : ஜன 19, 2025 06:54 AM
ராசிபுரம்: நாமக்கல் முன்னாள் எம்.பி., சுந்தரம், 73; அ.தி.மு.க.,வை சேர்ந்த இவர், சில ஆண்டுகளுக்கு முன், தி.மு.க.,வில் இணைந்தார். அவருக்கு மாநில கொள்கை பரப்பு துணைச்செய-லாளர் பதவி வழங்கப்பட்டது.
உடல் நலக்குறைவால் இருந்து வந்த சுந்தரம், கடந்த, 16ல் காலமானார். அவரது இறப்புக்கு, முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். சுந்தரத்தின் மகன் அமெரிக்காவில் இருந்து, நேற்று முன்தினம் இரவு வந்தார். நேற்று இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன. அமைச்சர் மதிவேந்தன், எம்.பி., ராஜேஸ்குமார், கலெக்டர் உமா உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். முன்ன-தாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர், சுந்தரம் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தங்கமணி வந்தபோது, சுந்தரம் உடலுக்கு, அ.தி.மு.க., கொடி போர்த்தப்பட்டது. தொடர்ந்து, தி.மு.க., கொடி போர்த்தப்பட்-டது. தொடர்ந்து, சொந்த ஊரான நாமகிரிப்பேட்டை ஒன்றியம், பச்சுடையாம்பளையத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.

