/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மோகனூரில் ரூ.23 கோடியில் குடிநீர் திட்டப்பணிக்கு அடிக்கல்
/
மோகனூரில் ரூ.23 கோடியில் குடிநீர் திட்டப்பணிக்கு அடிக்கல்
மோகனூரில் ரூ.23 கோடியில் குடிநீர் திட்டப்பணிக்கு அடிக்கல்
மோகனூரில் ரூ.23 கோடியில் குடிநீர் திட்டப்பணிக்கு அடிக்கல்
ADDED : பிப் 25, 2024 04:01 AM
மோகனுார்: நாமக்கல் மாவட்டம், மோகனுார் டவுன் பஞ்., மக்கள் பயன்பெறும் வகையில், 'அம்ரூத் 2.0' திட்டத்தின் கீழ், 23 கோடி ரூபாய் மதிப்பில் புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் நேற்று அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து மோகனுார் டவுன் பஞ்., அலுவலகத்தில் நடந்த விழாவுக்கு கலெக்டர் உமா தலைமை வகித்தார். டவுன் பஞ்., தலைவர் வனிதா வரவேற்றார். எம்.எல்.ஏ., ராமலிங்கம், அட்மா திட்ட தலைவர் நவலடி, டவுன் பஞ்., துணைத்தலைவர் சரவணகுமார், நகர தி.மு.க., செயலர் செல்லவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எம்.பி., ராஜேஸ்குமார் பேசியதாவது:
முன்னாள் டவுன் பஞ்., தலைவர் உடையவர் நடத்திய விழாவில், எங்களுக்கு தண்ணீர் பிரச்னை இருக்கு; மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி வேண்டும் என, கோரிக்கை வைத்தனர். அப்போது, 'அம்ரூத் 2.0' திட்டத்தில் சேர்க்க முதல்வரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். அதன்படி, இந்த திட்டம் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அரசு நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து, பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க கவுன்சிலர்கள் பணியாற்ற வேண்டும். உங்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்தும், எங்களால் செய்ய முடியும்.
இவ்வாறு பேசினார்.
செயல் அலுவலர் கலைவாணி, மண்டல டவுன்., பஞ்.,களின் செயற்பொறியாளர் ஜவகர், கவுன்சிலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, 4.15 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட வாரச்சந்தை விற்பனையகம், வணிக வளாக கடைகள், 19 லட்சம் ரூபாய் மதிப்பில், நவீன எரிவாயு மயானத்திற்கு அணுகுசாலை, 8 லட்சம் ரூபாய் மதிப்பில், ெஷட் அமைக்கும் பணி போன்றவைகளை, குத்து விளக்கு ஏற்றியும், பூமி பூஜை செய்தும், எம்.பி., ராஜேஸ்குமார் துவக்கி வைத்தார்.