/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆசை காட்டி ரூ.25.14 லட்சம் மோசடி
/
ஆசை காட்டி ரூ.25.14 லட்சம் மோசடி
ADDED : ஜூலை 17, 2025 02:24 AM
ஈரோடு, ஈரோடு, கருங்கல்
பாளையம், கொங்கு நகரை சேர்ந்த சம்பத் மகன் அலெக்சாண்டர், 39. கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மொபைல் போன்
சமூக வலைதளத்தில் (வாட்ஸ் ஆப்) புதிய ஆப் ஒன்று வந்தது.
இந்த ஆப் மூலம் பங்கு சந்தையில் முதலீடு செய்தால், அதிக வருவாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. அதை நம்பி புதிதாக வந்த ஆப்பை டவுன் லோடு செய்துள்ளார். பின் அதன் வழியாக, 20 முறை மொத்தம், 25 லட்சத்து, 14 ஆயிரத்து, 925 ரூபாய் அனுப்பியுள்ளார்.
அலெக்சாண்டருக்கு, 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே திரும்ப வந்தது. அதன் பின் பணம் ஏதும் வரவில்லை. அவர் விசாரித்த போது அதுபோலியான ஆப் என்பது தெரியவந்தது. இதுகுறித்து ஈரோடு சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து ஏமாற்றியது யார் என விசாரணை நடத்தி
வருகின்றனர்.