/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்
/
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்
ADDED : ஜூன் 27, 2024 03:54 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், டி.என்.பி.எஸ்.சி., போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு, நேற்று துவங்கியது.
நாமக்கல் - மோகனுார் சாலையில் செயல்படும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) குரூப்-2 நிலையில், 2,327 காலியிடங்களுக்கான அறிவிப்பு, கடந்த, 20ல் வெளியிட்டது. இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டப்படி, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நேற்று தொடங்கப்
பட்டது.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா தொடங்கி வைத்தார். இப்பயிற்சி, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை, காலை, 10:30 முதல், மதியம், 1:30 மணி வரை நடக்கிறது. பாடவாரியாக சிறந்த வல்லுநர்களை கொண்டு பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது.