/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வரும் 6ல், நாமக்கல்லில் துவக்கம்
/
குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வரும் 6ல், நாமக்கல்லில் துவக்கம்
குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வரும் 6ல், நாமக்கல்லில் துவக்கம்
குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வரும் 6ல், நாமக்கல்லில் துவக்கம்
ADDED : பிப் 04, 2024 10:40 AM
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும், தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவிக்கப்பட்டுள்ள, 6,244 காலி பணியிடங்களுக்கு வரும் ஜூன், 9ல், போட்டித்தேர்வு நடக்கிறது. இந்த தேர்விற்கு, www.tnpscexams.in/ www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் வரும், 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த தேர்வில் கலந்துகொள்ளும் தேர்வர்களுக்கு, இலவச பயிற்சி வகுப்பு, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின்படி, நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும், 6ல், காலை, 11:00 மணிக்கு துவங்குகிறது. வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள மனுதாரர்கள், தங்களின் விபரத்தை 04286- 222260 என்ற தொலைபேசி மூலமாகவோ அல்லது onlineclassnkl@gmail.com என்ற இமெயில் மூலமாகவோ அல்லது நேரிலோ தொடர்பு கொண்டு, தங்களது பெயர், முகவரி, மொபைல் போன் எண் அடங்கிய விபரத்தை பதிவு செய்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.