டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1, தொழில் நுட்ப பணிகள் தேர்விற்கு இலவச பயிற்சி
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1, தொழில் நுட்ப பணிகள் தேர்விற்கு இலவச பயிற்சி
ADDED : மே 31, 2026 03:00 AM
நாமக்கல்:நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல்
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்
செயல்பட்டு வரும், தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டி
தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு இலவசமாக நடத்தப்பட்டு
வருகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், 461 காலி
பணியிடங்களுக்கான காம்பைன்ட் டெக்னிக்கல் தேர்விற்கான அறிவிப்பு,
கடந்த, 20ல் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க,
கடைசி நாள் வரும் ஜூன், 25ம் தேதி.4ம் தேதி பயிற்சி துவக்கம்
மேலும்,
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின், 2026-ம் ஆண்டு
திட்டநிரலின்படி டி.என்.பி.எஸ்.சி., குரூப், 1 தேர்விற்கான
அறிவிப்பு வரும் ஜூன், 23ல், வெளியிடப்பட உள்ளது.
டி.என்.பி.எஸ்.சி.,
குரூப் 1 மற்றும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத்
தேர்வு அல்லாத பதவிகள்) தாள் ஒன்றிற்கான இலவச பயிற்சி வகுப்பு,
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட
பாடத்திட்டத்தின்படி, நேரடியாக நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு
மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வரும், 4ல், காலை, 10:30
மணிக்கு துவங்குகிறது.
தேர்ச்சி பெற்ற 76 பேர்
இங்கு பயின்ற
மாணவர்கள், 2025-26ல் வெளியான தேர்வு முடிவுகளில் மட்டும்,
டி.என்.பி.எஸ்.சி, குரூப், 4 தேர்வில், 17 பேர், டி.என்.பி.எஸ்.சி., குரூப்
2, 2ஏ முதல்நிலை தேர்வில், 15 பேர், டி.என்.யு.எஸ்.ஆர்.பி., பி.சி.,
தேர்வில், 19 பேர், பி.ஜி.டி.ஆர்.பி., தேர்வில், 2 பேர், கோ
ஆப்பரேட்டிவ் தேர்வில், 23 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு பாடவாரியாக சிறந்த வல்லுனர்களை
கொண்டு பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது. பயிற்சி வகுப்பில் கலந்து
கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள், தங்களின் விபரத்தை, 04286- 222260
என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது onlineclassnkl@gmail.com என்ற
மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டோ பதிவு செய்து
பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
