ADDED : ஜூலை 28, 2025 04:02 AM
சேந்தமங்கலம்: சேந்தமங்கலத்தில், நேற்று மக்கள் சக்தி தொண்டு அறக்கட்-டளை, கனரா வங்கி, வீரபத்ர சுவாமி கோவில் நல அறக்கட்ட-ளைகள், சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க உதவியுடன், 37ம் ஆண்-டாக இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின. நாமக்கல் மாவட்ட சுகாதார சேவைகள் இணை இயக்குனர் ராஜ்மோகன் துவக்கி வைத்தார். ஓய்வுபெற்ற அரசு உதவி செயற்பொறியாளர் ஜவஹர் தலைமை வகித்தார்.
மக்கள் சக்தி தொண்டு அறக்கட்டளை நிறுவனர் சாய் பாலமு-ருகன், கனரா வங்கி சீனியர் மேனேஜர் சுகன்யா ஆகியோர் முன்-னிலை வகித்தனர். துணை தலைவர் வெங்கடேஷ் வரவேற்று பேசினார். செயலாளர் பாலமுருகன் நன்றி தெரிவித்தார். முகாமில், 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அதில், 65 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சை, இன்று காலை சேலம் அரவிந்த் கண் மருத்துவமனையில் நடைபெற உள்ளது.