ADDED : ஜூன் 29, 2025 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல், தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம், பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை சார்பில், இலவச முழு உடல் மருத்துவ பரிசோதனை முகாம், நாமக்கல்லில் நடந்தது. சங்க தலைவர் சிங்கராஜ் தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்தார். செயலாளர் சுந்தரராஜன், பொருளாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில், இருதய சிகிச்சை, சிறுநீரகவியல், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல், குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை உள்ளிட்ட பிரிவுகளில், மருத்துவ நிபுணர்கள் கலந்துகொண்டு நோயாளிகளை பரிசோதனை செய்து, மருத்துவ ஆலோசனை வழங்கினர்.