நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, மாமுண்டி கிராமத்தில் நேற்று, வெண்-ணந்துார் தொன்போஸ்கோ அன்பு இல்லம், சேலம் விநாயகா மிஷன்ஸ் மருத்துவ கல்லுாரி சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. ஊராட்சிமன்ற துணைத்தலைவர் மஞ்சுளாகண்ணன் தலைமை வகித்தார்.
இதில், கண் மருத்துவம், முதுகு தண்டுவடம், குழந்தைகள் நலம், விபத்து, அவசர சிகிச்சை, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்-னைகள், பொது மருத்துவம், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இருதயம், தைராய்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விநாயக மிஷன் மேலாளர் பாலாஜி, மருத்துவர் தாமரைக்கண்ணன், பொதுமக்கள் உள்பட பலர் கலந்-துகொண்டனர்.