/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
துாய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்
/
துாய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்
ADDED : டிச 08, 2024 03:54 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதியில், 21 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வார்டுகளிலும் வீடு தோறும் சென்று குப்பை சேக-ரிப்பு, வடிகால் சுத்தம் செய்தல், திறந்தவெளியில் கொட்டப்-படும் குப்பை அள்ளுதல் உள்ளிட்ட பணிகளை துாய்மை பணி-யாளர்கள் செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம், நேற்று ஆவாரங்காடு, சந்தைப்பேட்டை உள்ளிட்ட, 5 இடங்களில் நடந்தது. நகராட்சி தலைவர் செல்-வராஜ், துணைத்தலைவர் பாலமுருகன் ஆகியோர் மருத்துவ முகாமை துவக்கி வைத்தனர்.முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனை செய்யப்-பட்டு, சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்-னைக்கு சிகிச்சையும், மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.