ADDED : மார் 31, 2025 03:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார்: பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், அகில இந்திய கட்டுநர் சங்கம் மற்றும் சுவாமி விவேகானந்தா மருத்துவ கல்-லுாரி சார்பில் இலவச மருத்துவ முகாம், நேற்று நடந்தது. இதில் அகில இந்திய கட்டுநர் சங்க இணை செயலாளர் சகாதேவன், அகில இந்திய கட்டுநர் சங்க தலைவர் தென்னரசு ஆகியோர் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர். 160க்கும் மேற்-பட்டோர் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனர்.
முகாமில், இதய நோய் உள்ளவர்கள் ரத்த கொதிப்பு, கொழுப்பு சத்து குறைபாடு உள்ளவர்கள் மூட்டு வலி, தோள்பட்டை வலி, எலும்பு முறிவு, கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் சிகிச்சை பெற்றனர். எக்ஸ்ரே, இ.சி.ஜி., இலவசமாக எடுக்கப்பட்டது.