ADDED : ஜன 28, 2025 07:00 AM
ராசிபுரம்: ராசிபுரம் சட்டசபை தொகுதி மற்றும் தாலுகாவில் உள்ள வீடு இல்லாதவர்களுக்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா, நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். அமைச்சர் மதிவேந்தன், எம்.பி., ராஜேஸ்குமார் ஆகியோர், 501 குடும்பங்களுக்கு பட்டா வழங்கினர். நகராட்சி சேர்மன் கவிதா, முன்னாள் எம்.எல்.ஏ., ராமசுவாமி, தாசில்தார் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில், எம்.பி., ராஜேஸ்குமார் பேசியதாவது: தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் தான் அதிக பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின், பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மகளிர் உரிமைத்தொகை, கல்லுாரி மாணவர்களுக்கு உதவித்தொகை, இலவச பஸ் பயணம் என தொடர்ந்து பெண்கள் முன்னேற்றத்துக்கு பாடுபட்டு வருகிறார். நாமக்கல்லில் தான், கலைஞர் வீடு திட்டத்தில் அதிக பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவவாறு அவர் பேசினார்.

