/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வேலைவாய்ப்பு மையத்தில் இலவச மாதிரி தேர்வு
/
வேலைவாய்ப்பு மையத்தில் இலவச மாதிரி தேர்வு
ADDED : ஆக 01, 2025 01:31 AM
நாமக்கல், நாமக்கல்லில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள தேர்வுக்காக, இலவச மாதிரி தேர்வு நடந்தது.
நாமக்கல்-மோகனுார் சாலையில் உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பில், பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. அதில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள, தேர்வுக்கான முழு பாடத்திட்டத்தையும் உள்ளடக்கிய இலவச மாதிரி தேர்வு நேற்று நடந்தது. இதில், 20 பேர் தேர்வு எழுதினர். தொடர்ந்து மாதிரி தேர்வுகள் வாரந்தோறும் திங்கள், வியாழக்கிழகைளில் நடக்கவுள்ளது.
இதேபோல் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயின்ற மாணவர்கள், கடந்த மூன்று ஆண்டுகளில் வெளியான தேர்வு முடிவுகளில் மொத்தம், 40 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

