/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல்லில் வாழை சாகுபடிக்கு இலவச பயிற்சி
/
நாமக்கல்லில் வாழை சாகுபடிக்கு இலவச பயிற்சி
ADDED : செப் 23, 2025 02:03 AM
நாமக்கல் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், நாளை புதன் கிழமை காலை, 10:00 மணிக்கு வாழை சாகுபடி தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் ஒருநாள் இலவச பயிற்சி நடக்கவுள்ளது.
இப்பயிற்சியில் வாழை சாகுபடியில் முக்கிய ரகங்கள், கிழங்கு நேர்த்தி செய்தல், உர மேலாண்மை, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, இலைவழி தெளிப்பு செய்தல், நீர் மேலாண்மை, ஊடுபயிர் செய்தல், மண் மற்றும் நீர் மாதிரி, பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்து தெளிவாக விளக்கவுரையும், செயல்விளக்கமும் செய்து காண்பிக்கப்படும்.
இதில், விவசாயிகள், விவசாய பெண்மணிகள், ஊரக இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் பயிற்சியில் கலந்துகொண்டு பயனடையலாம். இப்பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வமுள்ள விவசாயிகள், 04286-266345, 266650, 9787788005 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். 23 மாலை, 5:00 மணிக்குள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.