/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராசிபுரம் - மோகனுார் பைபாசில் அடிக்கடி விபத்து
/
ராசிபுரம் - மோகனுார் பைபாசில் அடிக்கடி விபத்து
ADDED : அக் 05, 2024 06:16 AM
ராசிபுரம்: ராசிபுரம் - மோகனுார் இடையே, சில ஆண்டுகளுக்கு முன் சாலையை அகலப்படுத்தி புதிதாக பைபாஸ் அமைக்கும் பணி நடந்தது.
பணிகள் முடிந்து கடந்தாண்டு போக்குவரத்து துவங்கியது. போக்குவரத்து துவங்கியதால், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சாலை அகலமாகவும், போக்குவரத்து குறைவாகவும் இருப்பதால் வாகனங்கள் அசுர வேகத்தில் செல்கின்றன. ஆனால், வேகம், சாலையில் உள்ள பள்ளம், மேடு ஆகிய காரணங்களால், ராசிபுரம் அருகே உள்ள சிங்களாந்தபுரம், மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி விபத்து நடக்கிறது.
இதுகுறித்து, சிங்களாந்தபுரத்தை சேர்ந்த விவசாயி ரமேஷ் கூறியதாவது: ராசிபுரம் - சிங்களாந்தபுரம் பைபாஸ் சாலையில், அடிக்கடி விபத்து நடக்கிறது. அசுர வேகத்தில் செல்லும் வாகனங்கள் சாலையோர வீட்டிற்குள் புகுவது; நேருக்கு நேர் மோதுவது; சாலையோர பள்ளத்தில் கவிழ்வது போன்ற சம்பவங்களால் விபத்து அதிகரித்துள்ளது. கடந்தாண்டு கொல்லிமலையில் இருந்து காரில் வந்த வனவர் உள்பட, 2 பேர் சாலையோரம் இருந்த நிழற்கூடம் மீது மோதிய விபத்தில், மூவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.இதேபோல், கடந்த வாரம் சனிக்கிழமை இரவு, சிங்களாந்தபுரம் முன், 2 சரக்கு வேன்கள் மோதிய விபத்தில், 2 பேர் இறந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர். முக்கியமாக இரவு நேரங்களில் இதுபோன்ற விபத்துகள் நடக்கின்றன. எனவே, வேகமாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதிப்பதோடு, வேகத்தை கட்டுப்படுத்த ஆங்காங்கே தடுப்புகள் அமைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.