/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சிகரெட் வாங்கி வர தாமதம் நண்பருக்கு 'கும்மாங்குத்து'
/
சிகரெட் வாங்கி வர தாமதம் நண்பருக்கு 'கும்மாங்குத்து'
சிகரெட் வாங்கி வர தாமதம் நண்பருக்கு 'கும்மாங்குத்து'
சிகரெட் வாங்கி வர தாமதம் நண்பருக்கு 'கும்மாங்குத்து'
ADDED : ஜூன் 14, 2025 07:47 AM
பள்ளிப்பாளையம்: சேலம் மாவட்டம், சங்ககிரியை சேர்ந்தவர் கார்த்தி, 21; இவர், ஈரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வருகிறார். இவரது நண்பர், பள்ளிப்பாளையம் அருகே, அலமேடு பகுதியை சேர்ந்த முருகேசன், 20; இவர் ஓட்டல் கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, பள்ளிப்பாளையம் அருகே, ஜீவாசெட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், நண்பர்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது, சிகரெட் வாங்கி வர சென்ற முருகேசன் தாமதமாக வந்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் கார்த்தி குத்துவிட்டதில், முருகேசன் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் முருகேசனை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, கார்த்தியை கைது செய்தனர்.