ADDED : ஆக 21, 2026 05:30 AM
அ நிறம் | அளவு
சேந்தமங்கலம்:சேந்தமங்கலம்
அடுத்துள்ள மேதரமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் சபின், 23. லாரி
டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது, சேந்தமங்கலம் போலீஸ்
ஸ்டேஷனில் குற்ற வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், சில வழக்குகளுக்கு
நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதையடுத்து
சபின், மேதரமாதேவி கிராமத்தில் பதுங்கி இருப்பதாக சேந்தமங்கலம்
போலீசாருக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் அந்தோணி மைக்கேல்
தலைமையிலான போலீசார் சென்று பதுங்கி இருந்த சபினை கைது செய்தனர்.
