தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ தலைமறைவு குற்றவாளி கைது

தலைமறைவு குற்றவாளி கைது

தலைமறைவு குற்றவாளி கைது


ADDED : செப் 21, 2026 05:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2026 05:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மோகனுார்:மோகனுார் அடுத்த என்.புதுப்பட்டி மேல ராஜவீதியை சேர்ந்தவர் அருள், 57, என்பவர் வீட்டில், கடந்த, 2024 ஏப்., 20 இரவு, 10:00 மணிக்கு, 4.5 பவுன் நகை, 1.20 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

இதுகுறித்து, மோகனுார் போலீசார் விசாரணை நடத்தி, தஞ்சை மாவட்டம், திருவையாறை சேர்ந்த சரவணபாபு (எ) வெள்ளை சரவணன், 37 என்பவர், பணம், நகையை திருடியதை அறிந்து அவரை கைது செய்தனர். இந்நிலையில், ஜாமினில் வெளியே வந்தவர், ஜாமின் முடிந்தும் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.அதையடுத்து, நாமக்கல் நீதிமன்றம் தலைமறைவு குற்றவாளியான சரவணபாபுவை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்தது. தொடர்ந்து, நாமக்கல் எஸ்.பி., யாதவ் கிரிஷ் அசோக் அறிவுறுத்தலின் பேரில், மோகனுார் எஸ்.ஐ., சீனிவாசன் பல்வேறு பகுதிகளில், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தார்.

இதற்கிடையில், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, மோகனுார் பஸ் ஸ்டாண்டில் சந்தேகம் படும் வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், திருட்டு வழக்கில் ஜாமின் பெற்று தலைமறைவான சரவணபாபு என்பது தெரியவந்தது. அதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், நாமக்கல் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us