/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தடுப்பணையில் முழு கொள்ளளவு நீர்த்தேக்கம்
/
தடுப்பணையில் முழு கொள்ளளவு நீர்த்தேக்கம்
ADDED : டிச 13, 2025 05:50 AM

பள்ளிப்பாளையம்: ஓடப்பள்ளி தடுப்பணையில் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால், கோடைகாலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அடுத்த ஓடப்பள்ளி காவிரி ஆற்றில், மின் உற்பத்தி செய்வதற்காக தடுப்பணை கட்டப்-பட்டது. ஒன்பது மீட்டர் உயரத்துக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்-பட்டு, ராட்சத ஜெனரேட்டர் மூலம், மின் உற்பத்தி செய்யப்படுகி-றது.அதேபோல், நீர்த்தேக்க பகுதியில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்-திகரிக்கப்பட்டு, பள்ளிப்பாளையம் நகரம், ஒன்றியம், ஆலாம்பா-ளையம், படவீடு, திருச்செங்கோடு என மாவட்டத்தில் பெரும்பா-லான பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
கடந்த, ஏழு மாதமாக ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் ஓடப்பள்ளி நீர்த்தேக்க பகுதியில் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால் கடல்போல், தடுப்பணை நீர் தேக்கம் காட்சியளிக்கிறது. குடிநீர் வினியோகத்திற்கு போதுமானளவு தண்ணீர் நீர்த்தேக்கத்தில் உள்-ளதால், வரும் கோடைகாலத்திலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்-ளனர்.

