/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா துவக்கம்
/
முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா துவக்கம்
ADDED : நவ 03, 2024 02:26 AM
ப.வேலுார்: ப.வேலுார் சுல்தான்பேட்டையில் உள்ள பகவதி அம்மன் கோவிலில், கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு பாலமுருக-னுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது.
அதேபோல், பாண்டமங்கலம் புதிய காசிவிஸ்வநாதர் கோவிலில் சுப்ரமணியர், கபிலர்மலை பாலசுப்ரமணிய சுவாமி, பிலிக்கல்பா-ளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர், பொத்தனுார் பச்சை-மலை முருகன் கோவில்களில், சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.அனிச்சம்பாளையத்தில் சுப்பிரமணியர், பாலப்பட்டி கதிர்மலை முருகன், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் எழுந்-தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் பிராந்தகத்தில் எழுந்தருளியுள்ள, 34 அடி உயரம் கொண்ட ஆறு-முக கடவுள் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணி-யருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.
* மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை மலைக்குன்றின் மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், வரும், 7ல் கந்தசஷ்டி விழா நடக்க உள்ளது. இதையொட்டி, நேற்று சிறப்பு பூஜையுடன் விழா தொடங்கியது. விழா முடியும் வரை தினமும், 11:00 மணிக்கு சிறப்பு பூஜையும், 12:00 மணிக்கு உச்சிகால பூஜையும் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
* சேந்தமங்கலம் அருகே, தத்தகிரி முருகன் கோவிலில், பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்-யப்பட்டது. தொடர்ந்து, சுவாமிக்கு சந்தனகாப்பில் ராஜ அலங்-காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
* குமாரபாளையம் திருவள்ளுவர் நகர், மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவிலில் முருகன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடு நடந்தது. தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சுவாமி ஊர்வலம் நடந்தது. 'அரோகரா' கோஷத்துடன் கோவிலை சுற்றி பக்தர்கள் வலம் வந்-தனர்.