/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்
/
விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்
ADDED : ஆக 28, 2024 08:36 AM
ராசிபுரம்: வரும் செப்., 7ல் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ராசிபுரம் பகுதியில் மட்டும், 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து பக்தர்கள் வழிபடுவர். சிலை வைப்பதற்கான அனுமதி கடிதம் பெற, விழாக்குழுவினர் விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில், விழாக்குழுவினர் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறி முறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜன் தலைமை வகித்து கூறியதாவது: விநாயகர் சிலை, 10 அடிக்கு மேல் உயரம் இருக்கக் கூடாது. போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சிலையை வைக்க வேண்டும். ஊர்வலத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அசம்பாவிதம் எதுவும் நடக்காத வண்ணம் பாதுகாப்புடன் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.