ADDED : ஆக 27, 2025 01:23 AM
நாமக்கல், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், ப.வேலுார், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் தயார் செய்யப்பட்ட சிலைகள் ஈரோடு, திருச்சி, சேலம், பெரம்பலுார், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அரை அடி முதல், 10 அடி உயரம் கொண்ட பல்வேறு விதமான சிலைகள், 150 ரூபாய் முதல், 3,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. நீர்நிலைகளில் எளிதில் கரையும் வகையில் காகித கூழ், மரவள்ளி கிழங்கு மாவு, களிமண் கொண்டு தயாரிக்கப்பட்ட சிலைகள் நாமக்கல் நகர் பகுதியில் விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து, விநாயகர் சிலை விற்பனையாளர் சுவாதி கூறுகையில், ''திருச்சி மாவட்டத்தில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை வாங்கி வந்து தற்போது விற்பனை செய்து வருகிறோம். பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகளை சேர்ந்தோர் அதிகம் வாங்கி செல்கின்றனர். இதனால் விற்பன ஜோராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.