ADDED : ஜூலை 05, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார், ப.வேலுார் அருகே, பொத்தனுாரில், நாமக்கல் மேற்கு மாவட்ட காங்., சார்பில் தெருமுனை பிரசாரம் நேற்று நடந்தது. நாமக்கல் மேற்கு மாவட்ட காங்., கமிட்டி தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பரமசிவம், காந்தி, நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பேச்சாளர் குமரி மகாதேவன், ''மத்தியில் காங்., ஆட்சியில் இருந்தபோது, விலைவாசி கட்டுக்குள் இருந்தது. மேலும், பெட்ரோல், டீசல் குறைந்த விலையில் விற்கப்பட்டது. தற்போது, பெட்ரோல், டீசல் விலை அதிகமானதால் விலைவாசி உயர்ந்து விட்டது. விலைவாசி உயர்வை தற்போதைய, பா.ஜ., அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டது,'' என்றார். பிரசாரத்தில், பொத்தனுார் டவுன் பஞ்., தலைவர் கருணாநிதி, மாவட்ட பொதுச்செயலாளர் நந்தகோபால், செயலாளர் சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.