/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விருப்ப ஊர் மாறுதல் வழங்கக்கோரி 'கேங்மேன்' தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

ADDED : ஆக 26, 2025 12:59 AM
நாமக்கல், 'கேங்மேன்களை, நாமக்கல் தாலுகாவிற்குள் விருப்ப ஊர் மாறுதல் வழங்க வேண்டும்' என்பது உள்ளிட்ட, ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாமக்கல் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட தலைவர் மவுலீஸ்வரன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் யுவராஜ், மாநில துணைத்தலைவர் ரமேஷ், தொழில்நுட்ப மாநில செயலாளர் கார்த்தி ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், கேங்மேன் பணியாளர்களுக்கு உடனடியாக கள உதவியாளர் ஆணை வழங்க வேண்டும். கேங்மேன் பணியாளர்களுக்கு நாமக்கல் வட்டத்திற்குள் விருப்ப ஊர்மாறுதல் உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து பணியாளர்களுக்கும் உடனடியாக பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். பருவமழை தொடங்க உள்ள காரணத்தால் அனைத்து பணியாளர்களுக்கும் ரெயின் கோட் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். வட்ட செயலாளர் விக்னேஷ், பொருளாளர் அருள்ராஜ், தொழில்நுட்ப பிரிவு வட்ட செயலாளர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.