/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் தாலுகா ஆபீஸ் முன் குப்பைக்கு தீயால் புகைமூட்டம்
/
நாமக்கல் தாலுகா ஆபீஸ் முன் குப்பைக்கு தீயால் புகைமூட்டம்
நாமக்கல் தாலுகா ஆபீஸ் முன் குப்பைக்கு தீயால் புகைமூட்டம்
நாமக்கல் தாலுகா ஆபீஸ் முன் குப்பைக்கு தீயால் புகைமூட்டம்
ADDED : மார் 21, 2024 02:14 AM
நாமக்கல், நாமக்கல் - மோகனுார் சாலையில், ஆர்.டி.ஓ., நெடுஞ்சாலைத்துறை, தாலுகா, வேலைவாய்ப்பு, வட்ட வழங்கல் அலுவலகம், பி.எஸ்.என்.எல்., அலுவலகம், அரசு பள்ளிகள் உள்ளிட்டவை செயல்படுகின்றன.
இந்நிலையில் தாலுகா அலுவலகத்தில் சேகரிக்கும் குப்பையை அதன் முகப்பு கேட் அருகே குவிக்கப்படுகிறது. அதை, தினமும் நகராட்சி துாய்மைப்பணியாளர்கள் எடுத்துச் செல்வார்கள். சில நாட்களாக அங்கு குவிக்கப்படும் குப்பையை சிலர் தீவைத்து எரிக்கின்றனர்.
இதனால் அப்பகுதி முழுதும் புகை மண்டலம் உருவாவதால், அலுவலர்கள், பொதுமக்கள் கண்ணெரிச்சல், மூச்சித்திணறலால் பாதிக்கப்படுகின்றனர்.
சேகரிக்கும் குப்பையை உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.