/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தற்கொலை செய்வதாக கடிதம் கார்மென்ட்ஸ் தொழிலாளி மாயம்
/
தற்கொலை செய்வதாக கடிதம் கார்மென்ட்ஸ் தொழிலாளி மாயம்
தற்கொலை செய்வதாக கடிதம் கார்மென்ட்ஸ் தொழிலாளி மாயம்
தற்கொலை செய்வதாக கடிதம் கார்மென்ட்ஸ் தொழிலாளி மாயம்
ADDED : செப் 04, 2024 09:30 AM
குமாரபாளையம்: தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, மாயமான கார்மென்ட்ஸ் தொழி-லாளி குறித்து போலீசார் விசாரித்து வருகின்-றனர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், அம்மன் நகரை சேர்ந்தவர் சதீஷ், 30; கார்மென்ட்ஸ் தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், கடந்த, 31ல் சென்-னையில் உள்ள தன் சகோதரி வீட்டிற்கு செல்வ-தாக, பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால், அவர் அங்கு செல்லவில்லை. மீண்டும், வீட்டிற்கும் வரவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர், சென்னையில் வசிக்கும் மகளிடம், போன் செய்து சதீஷ் குறித்து கேட்டுள்ளனர்.
அப்போது, சதீஷ் அங்கு வரவில்லை என்றும், தற்கொலை செய்து கொள்வதாக மொபைல் போனில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், வீட்டில் பார்த்தபோது ஒரு நோட்டில் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவ-ரது தந்தை முரளி, 58, கொடுத்த புகார்படி, குமார-பாளையம் போலீசார், மாயமான சதீஷை தேடி வருகின்றனர்.