/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காஸ் டேங்கர் லாரிகள் 'ஸ்டிரைக்' வாபஸ்
/
காஸ் டேங்கர் லாரிகள் 'ஸ்டிரைக்' வாபஸ்
ADDED : மார் 31, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: ஆயில் நிறுவனங்கள் அறிவித்த டெண்டரில் பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்க வலியுறுத்தி, தென்மண்டல எல்.பி.ஜி., காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கடந்த, ௨௭ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தை துவங்கினர்.
ஐந்தாவது நாளாக தொடர்ந்த போராட்டத்தை நேற்றிரவு வாபஸ் பெற்றனர்.
எல்.பி.ஜி., டேங்கர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் சுந்தரராஜன் கூறியதாவது:
அபராத தொகையை தள்ளுபடி செய்வதாகவும், வாகனங்கள் பெயர் மாற்ற பழைய டெண்டர் விதிமுறைகளையே கடைப்பிடிக்கலாம் எனவும், ஆயில் நிறுவன உயர் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதனால் போராட்டத்தை விலக்கிக் கொள்கிறோம். மீதி கோரிக்கைகளை பேசி தீர்த்துக் கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.