/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆக., 9ல் பொதுக்குழு அன்புமணி அறிவிப்பு
/
ஆக., 9ல் பொதுக்குழு அன்புமணி அறிவிப்பு
ADDED : ஆக 02, 2025 01:56 AM
சென்னை, 'பா.ம.க., பொதுக்குழு கூட்டம், வரும் 9ம் தேதி, மாமல்லபுரத்தில் நடக்கும்' என, அக்கட்சியின் தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அன்புமணி மற்றும் பா.ம.க., பொதுச்செயலர் வடிவேல் ராவணன் வெளியிட்ட கூட்டறிக்கையில், 'பா.ம.க., பொதுக்குழு கூட்டம், வரும் 9ம் தேதி காலை 11:00 மணிக்கு, மாமல்லபுரத்தில் நடக்கவுள்ளது. அதில், கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து, விவாதிக்கப்படும். பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே, 'வரும் 17ல், பா.ம.க., சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடக்கும்' என, ராமதாஸ் நேற்று அறிவித்த நிலையில், அதற்கு முன்பாகவே பொதுக்குழு கூட்டத்தை, அன்புமணி கூட்டியுள்ளார்.