/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஜெனீவா ஒப்பந்த தினம் அரசு கல்லுாரியில் போட்டி
/
ஜெனீவா ஒப்பந்த தினம் அரசு கல்லுாரியில் போட்டி
ADDED : ஆக 02, 2025 01:42 AM
நாமக்கல், :ஆண்டுதோறும் ஆக., 12ல், ஜெனீவா ஒப்பந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதையொட்டி, நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில், 'இந்தியன் ரெட் கிராஸ்' சார்பில் மாவட்ட அளவிலான, 76வது ஜெனீவா ஒப்பந்த தின போட்டி நடத்தப்பட்டது. கல்லுாரி முதல்வர்(பொ) ராஜேஸ்வரி தலைமை வகித்தார். சேலம் பெரியார் பல்கலை யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன், ஜெனீவா ஒப்பந்த தினத்தின் முக்கியத்துவத்தை விளக்கி, கட்டுரை, பேச்சு போட்டிகளை துவக்கி வைத்தார்.
நடுவர்களாக, மாவட்ட பள்ளிகளின் ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பாளர்கள் காதர் பாட்ஷா, சதீஷ்குமார் செயல்பட்டனர். மாவட்ட தலைவர் மாதையன், செயலர் ராஜேஷ்கண்ணன், திட்ட அலுவலர் சந்திரசேகரன், மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளர் வெஸ்லி உள்பட பலர் கலந்துகொண்டனர்.