/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு, அரசு உதவிபெறும் 177 பள்ளிகளுக்கு இறுதி தேர்வு தேர்ச்சிக்கு ஒப்புதல் அளிப்பு

ADDED : மே 10, 2025 01:07 AM
நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 177 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு, 2024-25ம் கல்வி ஆண்டிற்கான இறுதி தேர்வு தேர்ச்சிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 3ல் தொடங்கி, 25 வரையும்; பிளஸ் 1 பொதுத்தேர்வு, மார்ச், 5ல் தொடங்கி, 27 வரையும்; பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 28ல் தொடங்கி, ஏப்., 15 வரையும் நடந்து முடிந்தது. நேற்று முன்தினம், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது. இதற்கிடையே, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 177 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆறு முதல், ஒன்பதாம் வகுப்பு படித்த மாணவ, மாணவியரின் முழு ஆண்டு பொதுத்தேர்வு தேர்ச்சி விபரம் வெளியிடப்பட உள்ளது.
இதற்காக, நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலரின் ஒப்புதல் வழங்கும் பணி, நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன வளாகத்தில், நேற்று நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் கற்பகம் தலைமை வகித்தார். இப்பணியில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தலைமையிலான குழுவினர், பள்ளிகளின் தேர்ச்சி விபர பதிவேடுகளை முறையாக ஆய்வு செய்த பின், அதனடிப்படையில் மாவட்ட கல்வி அலுவலர், தேர்வு முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கினார்.
இதனடிப்படையில், அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள், தங்களது பள்ளியில், ஆறு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியரின் தேர்ச்சி விபரத்தை முறையாக வெளியிடுவர்.