/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை தொடர் கலந்தாய்வு
/
அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை தொடர் கலந்தாய்வு
அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை தொடர் கலந்தாய்வு
அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை தொடர் கலந்தாய்வு
ADDED : மே 31, 2025 06:41 AM
நாமக்கல்: நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில், 2025-26ம் ஆண்டுக்கான இளநிலை படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள், தற்போது பெறப்பட்டு வருகிறது.
இக்கல்லுாரியில், மொத்தம் உள்ள, 1,074 இடங்களுக்கு, இதுவரை, 10,444 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களுக்கான சேர்க்கை தரவரிசை பட்டியல் கல்லுாரியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://aagacnkl.edu.in/ல் வெளியிடப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு, ஜூன், 2, 3ல் நடக்கிறது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு, ஜூன், 4ல், தமிழ், ஆங்கிலம், வரலாறு, வணிக நிர்வாகவியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல் ஆகிய துறைகளுக்கும், ஜூன், 5ல், வணிகவியல், பொருளியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவியியல் மற்றும் கணினி அறிவியல் துறைகளுக்கும் நடக்கிறது.
ஜூன், 9ல், அனைத்து இளநிலை கலைப்பிரிவுகளுக்கும், ஜூன், 10ல், அனைத்து இளம் அறிவியல் பிரிவுகளுக்கும், ஜூன், 12, 13, 14ல், அனைத்து இளநிலை கலை மற்றும் அறிவியல் பிரிவுகளுக்கும் தொடர் கலந்தாய்வு நடக்கிறது என, கல்லுாரி முதல்வர் (பொ) ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.