/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல்லில் ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணி
/
நாமக்கல்லில் ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணி
நாமக்கல்லில் ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணி
நாமக்கல்லில் ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணி
ADDED : டிச 20, 2024 12:59 AM
நாமக்கல், டிச. 20-
நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், ஆட்சிமொழி சட்ட வாரம், டிச..18 முதல், 27 வரை கடைபிடிக்கப்படுகிறது.
அந்த வகையில் நேற்று, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரியில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஆர்.டி.ஓ., பார்த்திபன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பாரதி, கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணி, திருச்சி சாலை, மணிக்கூண்டு, பழைய பஸ் ஸ்டாண்டு, போலீஸ் ஸ்டேஷன் வழியாக மீண்டும் கல்லுாரி வந்தடைந்தது. தமிழ் மொழியை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி கல்லுாரி மாணவியர் பேரணியில் சென்றனர்.