/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் கோர்ட்டில் சாட்சியம் அளித்தபோது மாரடைப்பால் மயங்கி விழுந்த அரசு செயலர்

ADDED : அக் 05, 2024 06:55 AM
நாமக்கல்: தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலரும், தமிழ்நாடு காகித ஆலை மேலாண் இயக்குனருமான சந்தீப் சக்சேனா, வழக்கு ஒன்றில் ஆஜராக, நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்துக்கு நேற்று காலை வந்தார். மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி குருமூர்த்தி முன்னிலையில், கூண்டில் நின்று சாட்சியம் அளித்து கொண்டிருந்தார்.
அப்போது நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கினார். உடனடியாக நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பிறகு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நடந்த பரிசோதனையில், ரத்தக்குழாயில் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். சாட்சியம் அளித்து கொண்டிருந்த கூடுதல் தலைமை செயலர் மயங்கி விழுந்ததால், நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.