/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தி.கோடு-மல்லசமுத்திரம் ஒன்றியங்களில் ரூ.1.31 கோடியில் அரசு நலத்திட்ட உதவி
/
தி.கோடு-மல்லசமுத்திரம் ஒன்றியங்களில் ரூ.1.31 கோடியில் அரசு நலத்திட்ட உதவி
தி.கோடு-மல்லசமுத்திரம் ஒன்றியங்களில் ரூ.1.31 கோடியில் அரசு நலத்திட்ட உதவி
தி.கோடு-மல்லசமுத்திரம் ஒன்றியங்களில் ரூ.1.31 கோடியில் அரசு நலத்திட்ட உதவி
ADDED : அக் 14, 2025 02:21 AM
திருச்செங்கோடு, திருச்செங்கோடு-மல்ல
சமுத்திரம் ஊராட்சி ஒன்றியம், சூரியம்பாளையம் செங்குந்தர் திருமண மண்டபம் மற்றும் மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம், சந்தைப்பேட்டை செங்குந்த திருமண மண்டபம் ஆகிய இடங்களில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். திருச்செங்கோடு கொ.ம.தே.க.,-எம்.எல்.ஏ., ஈஸ்வரன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், கலெக்டர் துர்கா மூர்த்தி பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நகர்ப்புறத்தில் 110-ம், கிராமப்புறத்தில் 118-ம் என, மொத்தம், 238 முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற பகுதிகளில், 13 அரசு துறைகளை சார்ந்த, 43 சேவைகள் மற்றும் ஊரக பகுதிகளில், 15 துறைகளை சார்ந்த, 46 சேவைகளின் கீழ் மனுக்கள் பெறப்பட்டன. மேலும், ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில், 10,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மூலம், 6,97,577 கையேடு மற்றும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இம்முகாமில் பட்டியலிடப்பட்ட மனுக்கள், பட்டியலிடப்படாத மனுக்கள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளன. திருச்செங்கோடு ஒன்றியத்தில், 565 பயனாளிகளுக்கு, 54.72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில், 265 பயனாளிகளுக்கு, 76.55 லட்சம் ரூபாய் மதிப்பிட்டிலும் என, மொத்தம், 830 பயனாளிகளுக்கு, 1.31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, 830 பயனாளிகளுக்கு, 1.31 கோடி ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.