/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு கல்லுாரி ஆசிரியர்கள் வாயில் முழக்க ஆர்ப்பாட்டம்
/
அரசு கல்லுாரி ஆசிரியர்கள் வாயில் முழக்க ஆர்ப்பாட்டம்
அரசு கல்லுாரி ஆசிரியர்கள் வாயில் முழக்க ஆர்ப்பாட்டம்
அரசு கல்லுாரி ஆசிரியர்கள் வாயில் முழக்க ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 26, 2024 07:56 AM
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த ஆண்டகலுார்கேடில், திருவள்ளுவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உள்ளது. இங்கு, 2,000க்கும் மேற்-பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். கல்லுாரி ஆசிரி-யர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர், நேற்று பல்வேறு கோரிக்-கைகளை வலியுறுத்தி வாயில் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதில், கல்லுாரியில் மாற்றுப்பணியில் பணிபுரியும் அண்ணா-மலை பல்கலை மிகை பேராசிரியர்கள் அரசு கல்லுாரியிலேயே நிரந்தரமாக பணியாற்றுவதை கண்டிக்கிறோம். அரசு கல்லுாரி-களில் மிகை பேராசிரியர்கள் பணி நிரந்தரமாக்கப்பட்டால், அது சமூக நீதிக்கொள்கைக்கு எதிராக அமைந்துவிடும். அண்ணா-மலை பல்கலை மிகை
பேராசிரியர்களை அரசு கல்லுாரியில் நிரந்-தரமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு முற்-றிலும் நிராகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, 50க்கும் மேற்-பட்ட பேராசிரியர்கள் அரசு கல்லுாரி நுழைவாயில்
முன் வாயில் முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு ஆசிரியர் கழகம் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொறுப்-பாளர் பிரகாஷ் தலைமை வகித்தார்.
* அண்ணாமலை பல்கலை ஆசிரியர் சங்கம் சார்பில், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரி முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளைதலைவர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். செயலாளர் சர்மிளாபானு, பொருளாளர்
ஜெயந்தி ஆகியோர் முன்-னிலை வகித்தனர். அதில், அண்ணாமலை பல்கலை உபரி ஆசிரி-யர்களை அரசு கல்லுாரிகளில் பணி நிரந்தரம் செய்யக்கூடாது. அவர்களது மாற்றுப்பணியை ரத்து செய்ய வேண்டும் என்ற
கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில், 25 பேராசிரியர்கள் பங்கேற்றனர்.