/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாயக்கழிவு பொது சுத்திகரிப்பு நிலையத்தை அரசே கொண்டு வரவேண்டும்: தங்கமணி
/
சாயக்கழிவு பொது சுத்திகரிப்பு நிலையத்தை அரசே கொண்டு வரவேண்டும்: தங்கமணி
சாயக்கழிவு பொது சுத்திகரிப்பு நிலையத்தை அரசே கொண்டு வரவேண்டும்: தங்கமணி
சாயக்கழிவு பொது சுத்திகரிப்பு நிலையத்தை அரசே கொண்டு வரவேண்டும்: தங்கமணி
ADDED : பிப் 23, 2024 01:40 AM
பள்ளிப்பாளையம்;''சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்ய, அரசே பொது சுத்திகரிப்பு நிலையம் கொண்டு வரவேண்டும்,'' என, சட்டசபையில் நடந்த பட்ஜெட் மீதான விவாதத்தில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தங்கமணி பேசினார்.
அவர், சட்டசபையில் பேசியதாவது:மேட்டூர் இடது, வலது கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடாததால், பள்ளிப்பாளையம் பகுதியில் மிகவும் வறட்சியாக உள்ளது. இப்போது வெயில் அதிகமாக உள்ளதால் ஆடு, மாடுகளுக்கு கூட குடிப்பதற்கே தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, 15 நாட்களுக்கு கூடுதலாக தண்ணீர் திறந்துவிட வேண்டும். மேலும், காவிரியாற்றில் ஆறே தெரியாத அளவிற்கு ஆகாயத்தாமரை ஆக்கிரமித்துள்ளது. அதனை அகற்ற, அரசு சிறப்பு திட்டத்தை கொண்டுவர வேண்டும்.
சாயப்பட்டறை நடத்துபவர்கள், சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்றால், அதற்கு பொருட்செலவு அதிகமாகிறது. அதனால், சாயக்கழிவு நீரை சுத்திகரிக்க அரசே, பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். இப்போது ஆற்றில் தண்ணீர் குறைவாக உள்ளது. அந்த தண்ணீரை குடிப்பதற்கு வினியோகிப்பதால், துர்நாற்றம் வீசுகிறது. தொழிலும் நடக்க வேண்டும், அதே நேரம் நமக்கு நல்ல குடிநீர் கிடைக்க வேண்டும் என்றால், அரசே பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.