/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கே.எஸ்.ஆர்., கலை அறிவியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
கே.எஸ்.ஆர்., கலை அறிவியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
கே.எஸ்.ஆர்., கலை அறிவியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
கே.எஸ்.ஆர்., கலை அறிவியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : செப் 24, 2024 01:28 AM
திருச்செங்கோடு: திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி, கே.எஸ்.ஆர்., மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில், பட்டம-ளிப்பு விழா நடந்தது. கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவனங்களின் துணை தலைவர் சச்சின், பட்டமளிப்பு விழாவை துவக்கி வைத்தார்.
நிர்வாக இயக்குனர் மோகன், முதன்மை திட்ட அலு-வலர் பாலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலை அறி-வியல் கல்லுாரிகளின் முதல்வர்கள் பத்மநாபன், கார்த்திகேயன் ஆகியோர் பட்டமளிப்பு விழா ஆண்டறிக்கை வாசித்தனர்.
சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன், மாணவ, மாணவியருக்கு பட்டச்சான்றிதழ் வழங்கி பேசினார். பல்கலை மானியக்குழு உறுப்பினர் ராஜ்குமார்மிட்டல், பட்டமளிப்பு விழா குறித்து பேசினார். அப்போது,
'மாணவ, மாணவியர் தங்களுக்-கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தி, வெற்றி இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்' என்றார்.விழாவில், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், 2 பேருக்கும், தன்-னாட்சி கல்லுாரி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த, 29 மாணவ, மாணவியருக்கும் சான்றிதழ், விருது வழங்கி பாராட்-டினர். இளநிலை, முதுநிலை துறையை
சேர்ந்த, 410 மாணவிய-ருக்கு பட்டச்சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து உறுதி-மொழி ஏற்றுக்கொண்டனர்.