/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் கூட்டுறவு மேலாண் பயிற்சி நிலையத்தில் பிரிவுபசார விழா
/
நாமக்கல் கூட்டுறவு மேலாண் பயிற்சி நிலையத்தில் பிரிவுபசார விழா
நாமக்கல் கூட்டுறவு மேலாண் பயிற்சி நிலையத்தில் பிரிவுபசார விழா
நாமக்கல் கூட்டுறவு மேலாண் பயிற்சி நிலையத்தில் பிரிவுபசார விழா
ADDED : ஜூன் 29, 2025 12:53 AM
நாமக்கல், நாமக்கல் கூட்டுறவு மேலாண் பயிற்சி நிலையம் சார்பில், 2024-25ம் ஆண்டின், முழு நேர
பட்டய பயிற்சி மாணவ, மாணவியருக்கான ஆண்டுவிழா மற்றும் பிரிவுபசார விழா, நாமக்கல்லில் நடந்தது.
நாமக்கல் மாவட்ட கூட்டுறவு மேலாண் பயிற்சி நிலைய முதல்வரும், துணைப்பதிவாளருமான செல்வகுமார் தலைமை வகித்தார். நாமக்கல் சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் ஜேசுதாஸ், துணைப்பதிவாளர்கள் செல்வி, இந்திரா, பாலசுப்பிர மணியன், பால் ஜோசப் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
விழாவை முன்னிட்டு, மாணவ, மாணவியருக்கு 100 மீ., 200 மீ., 1,200 மீ., ஓட்டப்பந்தயம், குண்டுஎறிதல், கைப்பந்து போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவர் களுக்கு கேடயம், கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண் இயக்குனர் சரவணன், விரிவுரையாளர்கள் கோவிந்தராசு, காயத்ரி, சுப்ரமணியம் உள்பட பலர் பங்கேற்றனர்.