/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்டத்தில் 310 கிராம பஞ்.,ல் 11ல் கிராமசபை கூட்டம்: கலெக்டர்
/
மாவட்டத்தில் 310 கிராம பஞ்.,ல் 11ல் கிராமசபை கூட்டம்: கலெக்டர்
மாவட்டத்தில் 310 கிராம பஞ்.,ல் 11ல் கிராமசபை கூட்டம்: கலெக்டர்
மாவட்டத்தில் 310 கிராம பஞ்.,ல் 11ல் கிராமசபை கூட்டம்: கலெக்டர்
ADDED : அக் 02, 2025 02:10 AM
நாமக்கல், 'வரும், 11ல், மாவட்டத்தில் உள்ள, 310 கிராம பஞ்.,களில் கிராமசபை கூட்டம் நடக்கிறது' என, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்டத்திலுள்ள, 310 கிராம பஞ்.,களிலும், இன்று காந்திஜெயந்தியை முன்னிட்டு நடக்க இருந்த கிராம சபை கூட்டம், நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு, வரும், 11ல், காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. கூட்டத்தில், கிராம பஞ்., நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்க வேண்டும். கிராம பஞ்., தணிக்கை அறிக்கை, ஊரக பகுதிகளில், மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும்.
கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது பற்றியும் ஆலோசனை செய்ய வேண்டும். மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2, துாய்மை பாரத இயக்க திட்டம் மற்ற பொருட்கள் குறித்தும் விவாதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.