/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
26ல் 322 கிராம பஞ்.,ல் கிராம சபை கூட்டம்
/
26ல் 322 கிராம பஞ்.,ல் கிராம சபை கூட்டம்
ADDED : ஜன 19, 2025 06:53 AM
நாமக்கல்: 'மாவட்டத்தில் உள்ள, 322 கிராம பஞ்.,களிலும், வரும், 26ல் குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடக்கிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 322 கிராம பஞ்.,களிலும், வரும், 26ல் குடியரசு தினத்தன்று, காலை, 11:00 மணிக்கு, கிராம சபை கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில், கிராம பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம பஞ்., தணிக்கை அறிக்கை சமர்ப்பிப்பு, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதிக்க வேண்டும். மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம், 2025-26ம் நிதி-யாண்டிற்கான கிராம வளர்ச்சி திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல் மற்றும் இதர பொருட்கள் குறித்து ஆலோசனை செய்து தீர்மா-னங்கள் நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.