/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா கோலாகலம்
/
குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா கோலாகலம்
குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா கோலாகலம்
குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா கோலாகலம்
ADDED : பிப் 28, 2025 06:45 AM
குமாரபாளையம்: குமாரபாளையம் மயான காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம், காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், மயான காளியம்மன் சர்வ அலங்காரத்துடன் அருள்பாலித்தார். காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. நள்ளிரவு, 12:00 மணிக்கு பெரியாண்டிச்சி அம்மனுக்கு கண் திறக்கும் வைபவம் நடந்தது. நேற்று காலை, 9:00 மணியளவில் மயானத்திலிருந்து காட்டேரி அழைத்து வருதல், மதியம், ௩:௦௦ மணிக்கு மயானத்திலிருந்து மாசானம் புறப்படுதல், மயான கொள்ளை, இரவு, 8:00 மணிக்கு பெரியாண்டிச்சி அம்மனுக்கு தாலாட்டு வைபவம் நடந்தது. இன்று, எருமை கிடா வெட்டுதல், நாளை மாலை, 6:00 மணிக்கு மகா குண்டம், பூ மிதித்தல் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.
* ராசிபுரம் அடுத்த புதுப்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் மாசானத்தாய் கோவிலில், மகா சிவராத்திரி விழா நடந்தது. மயான கொள்ளை நிகழ்ச்சி நடப்பதற்கு முன், சுவாமிக்கு பக்தர்கள் பழம் படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பழங்கள் எடுத்துக்கொண்டு, நடனமாடியபடி ஊர்வலமாக வந்தனர். பின், பக்தர்கள் கொண்டு வந்த பழம், மொச்சை கொட்டை ஆகியவற்றை அம்மனுக்கு படையலிட்டு பூஜை செய்தனர். பூஜை முடிந்தவுடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலை மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது.
* ராசிபுரம் அருகே, ஆர்.புதுப்பாளையத்தில் பழமையான நாகமாயம்மன் கோவில் உள்ளது. நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், முகம் எடுத்து ஆடும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மூங்கில்களை வைத்து படலாக கட்டி, அரிசி மாவில் ஐந்து வித்தியாசமான முகம் போன்ற உருவங்களை தயார் செய்து, மா இலை, தீப்பந்தம் வைத்து, 15 கிலோ எடை கொண்ட அந்த உருவத்தை துாக்கி ஆடிக்கொண்டு, கோவிலிலிருந்து மயானம் வரை செல்வர். பின், மயானத்தில் காவு சோறு கொடுக்கப்படும். அவ்வாறு கொடுக்கப்படும் காவு சோறை உட்கொண்டால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு, விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.