/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சரளை கற்கள், மணல் லோடு சரியான கொள்ளளவில் தார்பாய் மூடி எடுத்து செல்ல வேண்டும்: கலெக்டர்

ADDED : மே 28, 2024 07:10 AM
நாமக்கல் : ''வாகனங்களில் சரளை கற்கள், மணல், சுடு கலவைகளை எடுத்துச்செல்லும் போது, சரியான கொள்ளளவுடன் தார்பாய் கொண்டு மூடி சிதறாமல் எடுத்துச்செல்ல வேண்டும்,'' என, நாமக்கல் கலெக்டர் உமா அறிவுறுத்தினார்.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், சரக்கு வாகனங்கள் கொள்ளளவுக்கு மேல் எடுத்து செல்வதால், சாலையில் சிதறி விபத்துகள், சாலையின் மேல்தளம் மற்றும் சாலை உபகரணங்கள் சேதமடைவது தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதாவது: நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம் சாலையில், கிரசர்ஸ் நிறுவனங்களின் சரக்குந்து வாகனங்களில் அதிக பாரத்துடன் கொள்ளளவுக்கு மேல் சரளை கற்கள், மணல், சுடு கலவைகளை எடுத்து செல்வதால், சாலையில் சிதறி விபத்துகள், சாலையின் மேல்தளம் மற்றும் சாலை உபகரணங்கள் சேதமடைகின்றன. அதனால், வாகனங்களில் சரளை கற்கள், மணல் மற்றும் சுடு கலவைகளை கட்டுமான பணிக்காக எடுத்துச்செல்லும் போது, சரியான கொள்ளளவுடன் தார்பாய் கொண்டு மூடி சாலையில் சிதறாமல் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும், எம்.சாண்ட், பி.சாண்ட் போன்றவற்றை உலர்ந்த நிலையில் எடுத்துச்செல்ல வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.சென்னை- - கன்னியாகுமரி தொழிற்தட திட்ட கோட்ட பொறியாளர் சசிக்குமார், புவியம் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் லோகநாதன், மாசு கட்டுப்பாட்டு வாரிய கோட்ட பொறியாளர் ரகுநாதன், வட்டார போக்குவரத்து அலுவலர் (வடக்கு) முருகேசன், சேந்தமங்கலம் தாசில்தார் சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.