/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பச்சை சோளத்தட்டுகட்டு ரூ.15க்கு விற்பனை
/
பச்சை சோளத்தட்டுகட்டு ரூ.15க்கு விற்பனை
ADDED : டிச 21, 2024 01:14 AM
வெண்ணந்துார், டிச. 21-
வெண்ணந்துார் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக, கால்நடை தீவன சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. சோளத்தட்டு பயிர், வளர்ச்சி அடையாமல் அதிக மழை காரணமாக அழுகியது. தொடர் மழை காரணமாக, தீவனத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டு, பச்சை சோளத்தட்டு தீவனம் விலை அதிகரித்துள்ளது. வெண்ணந்துார் மற்றும் சுற்றுவட்டார பகுதியில், விவசாயம் அதிகமாக உள்ளதால் கால்நடை வளர்ப்பு அதிகமாக உள்ளது. மாடுகளுக்கு உணவாக கொடுக்கப்படும் பச்சை சோளத்தட்டு விலை அதிகரிப்பால், கால்நடை வளர்ப்பவர்கள், அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து, அளவாய்ப்பட்டி விவசாயி ஒருவர் கூறியதாவது:
கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக சோளத்தட்டு குறைவாக கிடைக்கிறது. தேடிச் சென்று தீவனம் வாங்கி வருகிறோம். வழக்கமாக ஒரு கட்டு, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். ஆனால், தற்போது, 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.