ADDED : செப் 23, 2024 04:52 AM
திருச்செங்கோடு: திருச்செங்கோடு ஒன்றிய தி.மு.க., மற்றும் உதயா ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், பசுமை மாரத்தான் போட்டி நடந்தது.
தி.மு.க., செயலாளர் தங்கவேல் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்-பினர் நடேசன், சேர்மன் சுஜாதா, பி.ஆர்.டி., நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மது-ராசெந்தில், கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்தார்.இதில், 4 முதல் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, 2.5 கி.மீ., துாரம்; 8 முதல் 15 வயதுக்குட்பட்ட ஆண், பெண்க-ளுக்கு, 5 கி.மீ., துாரம்; அதற்கு மேல் வயதுள்ளவர்களுக்கு, 10 கி.மீ., துாரம் என, போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற-வர்களுக்கு, கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவன விளையாட்டு மைதா-னத்தில் பரிசு வழங்கும் விழா நடந்தது. திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன், நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரவன், எஸ்.கே.வி., பள்ளி சேர்மன் கோல்டன்ஹார்ஸ் ரவி ஆகியோர் பரிசு, சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். திருச்செங்கோடு தி.மு.க., நகர செயலாளர் கார்த்திகேயன், தி.மு.க., வக்கீல் அணி தலைவர் சுரேஷ்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.