ADDED : ஏப் 22, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்:
ராசிபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட மலையாம்பட்டி, வடுகம், பட்டணம் முனியப்பம்பாளையம், காக்காவேரி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். மக்கள் தெரிவித்த பிரச்னைகளை, உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது, பட்டணம் முனியப்பம்பாளையம் பகுதியில், கடந்த ஒரு மாதமாக குடிநீர் மோட்டார் பழுதாகி இருப்பதாக தெரிவித்தனர். அதனை உடனடியாக சரிசெய்ய உத்தரவிட்டார்.